இன்று கூடுகிறது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல்...

இன்று குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று கூடுகிறது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல்...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சுமார் 3 வாரங்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று சபாநாயகர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். 

இதற்கு கடந்த 24-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்படும். இதேபோல், மாநிலங்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும். அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்குவார். அதன்பிறகு புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.