வருகிற 14ஆம் தேதி முதல் வழக்கமான இருக்கை முறையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 14ஆம் தேதி முதல் வழக்கமான இருக்கை அமர்வு முறையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 14ஆம் தேதி முதல் வழக்கமான இருக்கை முறையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!!

2022-23ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரை மற்றும் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 11ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மக்களவை, மாநிலங்களவை இரண்டும், காலை 11 மணி முதல் ஒரே நேரத்தில் செயல்படும் என்றும், இரு அவை உறுப்பினர்களும் வழக்கமான இருக்கை அமர்வு முறையில் அமர்ந்தவாறு கூட்டம் நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் உறுப்பினர்களும் முன்பைப் போல அந்தந்த அவைகளின் கேலரிகள், அறைகளை பயன்படுத்துவார்கள் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா கட்டுப்பாடுகளை அவை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.