இந்திய ஊடகங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளன - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி!

இந்திய ஊடகங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளன - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி!

இந்திய ஊடகங்கள் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Ideas for India மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வேலைவாய்ப்பை வழங்குவதில் தோல்வியை சந்தித்த போதும், ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்தி பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியாவை மக்களோடு மக்களாக நாங்கள் பார்க்கும் அதே நேரத்தில், புவியியல் ரீதியாக மட்டுமே பாஜகவினர் இந்தியாவை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.