முன்கூட்டியே தொடங்கவிருக்கும் தென்மேற்கு பருவமழை...வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை அளிக்குமா?

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

முன்கூட்டியே தொடங்கவிருக்கும் தென்மேற்கு பருவமழை...வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை அளிக்குமா?

தென்மேற்கு பருவமழையானது பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15ம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் அதே தேதியில் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  

இதனால் அந்தமானில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரளா மாநிலத்திலும் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி தென்படுவதாகவும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பருவமழை முன்கூட்டியே பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.