மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க "பள்ளி செல்க" திட்டம் - முதல்வர் யோகி தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேசத்தில் ‘பள்ளி செல்க’ திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் மாணவர்களுக்கு மதிய உணவினை பரிமாறினார்.

மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க "பள்ளி செல்க" திட்டம் - முதல்வர் யோகி தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேசத்தில் உள்ள தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் 'பள்ளி செல்க' என்ற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

இந்தநிலையில் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு வசதிகளை மேம்படுத்த  ‘பள்ளி செல்க ’ திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஷ்ரவஸ்தி மாவட்ட பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி முதல்வர் யோகி, மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கினார்.