பிரதமர் மோடி வலிமையடைய காரணம் நீங்கள் தான்... காங்கிரஸை குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி... 

பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் என்று மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் மோடி வலிமையடைய காரணம் நீங்கள் தான்... காங்கிரஸை குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி... 

பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் என, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர் ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவா மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவர் ஆக்குவதே காங்கிரஸ் கட்சி தான் என்றும், பா. ஜ.க.வுக்கு விளம்பரம் தேடி தரும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுவதாக குறிப்பிட்டுள்ள மம்தா பானர் ஜி, மேற்கு வங்காளத்தில் பா. ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மோதாமல் தம்முடனும், தமது கட்சியை எதிர்த்தும் மோதியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.