உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது பொருளாதார சுதந்திரப் போராளிகள் (EFF) என்ற அமைப்பு.
ராணி இரண்டாம் எலிசபெத் அக்டோபரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று மரணமடைந்தார்.
ராணியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம், ஏனெனில் அவரது மரணம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் வரலாற்றில் மிகவும் சோகமான காலகட்டத்தை நினைவூட்டுவதாக உள்ளது.
1952 ஆம் ஆண்டு அரியணை ஏறிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை மனிதநேயமற்ற முறையில் அழித்து உருவாக்கிய ராஜ்ஜியத்தின் மீது அதன் தலைவராக 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படேவியன் கட்டுப்பாட்டில் இருந்த தென்னாப்பிரிக்காவை 1795ல் அரச குடும்பத்தின் தலைமையின் கீழ் கொண்டு வந்து 1806ல் நாட்டின் முழு கட்டுபாட்டையும் நிரந்தரமாக கைப்பற்றியது.
“அந்த தருணத்திலிருந்து, இந்த மண்ணின் பூர்வீக மக்கள் ஒருபோதும் அமைதியை அறிந்ததில்லை, இந்த மண்ணின் செல்வத்தின் பலனை அவர்கள் அனுபவித்ததில்லை, அவர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தின் செல்வச் செழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டனர், இன்னும் பயன்படுத்தப்படுகிறார்கள்.” என (EFF) அமைப்பு கூறியுள்ளது.
”இங்கிலாந்தும் அரச குடும்பமும் உலகம் முழுவதும் செய்த குற்றங்களை ராணி அவரது வாழ்நாளில் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை” என்று EFF குற்றஞ்சாட்டியுள்ளது.
”ராணியாக அவர் இருந்த கடந்த 70 ஆண்டுகால ஆட்சியில், இங்கிலாந்து உலகம் முழுவதும் படையெடுத்து பூர்வீக மக்களுக்கு இழைத்த கொடுமைகளை அவர் ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் கோடிக் கணக்கான மக்களை சுரண்டல் செய்ததன் மூலமும் கொலை செய்ததன் மூலமும் கிடைத்த செல்வத்தை அவர் விருப்பத்துடன் பயன்படுத்தினார்.” எனவும் விமர்சித்துள்ளது EFF.
நிறவெறி, இனவெறி கொள்கை மூலமாக மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் தோள்களில் இங்கிலாந்து அரசு நிற்கிறது எனவும் அவர்களை மையமாக கொண்டு இங்கிலாந்து அரச குடும்பம் வாழ்கிறது எனவும் கூறியுள்ளது EFF.
"மரணத்திற்குப் பிறகு உண்மையான வாழ்க்கையும் நீதியும் இருந்தால், எலிசபெத்தும் அவரது முன்னோர்களும் அவர்களுக்கு தகுதியானதைப் பெறட்டும்" என்று EFF கூறியுள்ளது.
இதையும் படிக்க: ராணிக்கும் டயனாவிற்கும் இடையே கசப்பான உறவு ஏற்பட்ட காரணம் என்ன??