நொய்டாவில் அமையவுள்ள 5-வது சர்வதேச விமான நிலையம்..!

இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!

நொய்டாவில் அமையவுள்ள 5-வது சர்வதேச விமான நிலையம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ள 5-வது சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுக்க உள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட குஷிநகர் விமான நிலையம், அயோத்தியாவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட புதிய சர்வதேச விமான நிலையங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பன்முக வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள நெருக்கடியை குறைக்கும் விதமாக நொய்டா விமான நிலையம் கட்டப்பட உள்ளது. 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 10 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.