பட்டையை கிளப்பும் ஆப்ரேஷன் கங்கா... 220 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்த 2-வது விமானம்

ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் இருந்து மேலும் 220 இந்தியர்களை மீட்டுக் கொண்டு  இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம் டெல்லி வந்தடைந்தது.

பட்டையை கிளப்பும் ஆப்ரேஷன் கங்கா... 220 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்த 2-வது விமானம்

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாய் நாட்டிற்கு  அழைத்து வரப்படுகின்றனர். இந்த பணியில் இந்திய விமானப்படை விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ருமேனியா தலைநகர் புடாபெஸ்டில் இருந்து மாணவர்கள் உள்பட 200 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான முதல் விமானம் டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நேற்றிரவு தரை இறங்கியது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.  

இந்த நிலையில் ருமேனியா தலைநகர் புடாபெஸ்டில் இருந்து மேலும் 220 இந்தியர்களை மீட்டுக் கொண்டு இந்திய விமானப்படையின் C-17 விமானம் டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இதுவரை 420 இந்தியர்கள் இந்தியா மீட்டு வரப்பட்டுள்ளனர். இன்னும் இரு விமானங்கள் டெல்லி வந்தடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.