ஜம்மு காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..! தொடர்ந்து குறிவைக்கப்படும் வெளிமாநிலத்தவர்..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் ஒரே நாளில் 3 ஹிந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் ...

ஜம்மு காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..! தொடர்ந்து குறிவைக்கப்படும் வெளிமாநிலத்தவர்..!

ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குல்காம் மாவட்ட தனியார் வங்கி  மேலாளரை வங்கிக்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொன்றான். ராஜஸ்தானை சேர்ந்த இந்த வங்கி மேலாளர் அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு இடமாறுதலாகி வந்தவர் ஆவார்.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் பீகாரைச் சேர்ந்த இரண்டு கூலித் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தில்குஷ் குமார் என்பவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மே 1ம் தேதி முதல் இதுவரை 9 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.