பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு : குற்றவாளி யாசின் மாலிக் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்...
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் அவர் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.