அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம் - அமித்ஷா தலையிட கோரிக்கை

மிசோரம் - அசாம் மாநில எல்லைப் பகுதியில், ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம் - அமித்ஷா தலையிட கோரிக்கை

வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில், மிசோரத்தை ஒட்டியுள்ள அசாம் மாவட்டமான சச்சாரில் உள்ள லைலாபூர் கிராமத்தில் அசாம் அரசு அதிகாரிகள் மீது, கல் மற்றும் கம்புகளைக் கொண்டு மிசோரம் மக்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இரு மாநில எல்லைப் பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.