கட்சியின் புதிய பெயரை அறிவித்தார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்.. இனி தேசிய கட்சியாம்..!

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஆயுத்தம்..!

கட்சியின் புதிய பெயரை அறிவித்தார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்.. இனி தேசிய கட்சியாம்..!

புதிய பெயர் சூட்ட முடிவு:

2024 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி, புதிய பெயரை சூட்டவும் முடிவு செய்தார். 

பொதுக்கூட்டம்:

இந்நிலையில் தேசிய கட்சி அறிவிப்புக்கான பொதுக்கூட்டம், அம்மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் உள்ளிட்டோரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

பாரத் ராஷ்ட்ர சமிதி:

இந்தக் கூட்டத்தில் தனது கட்சியை தேசியக் கட்சியாக அறிமுகம் செய்து வைத்த சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ர சமிதி என்ற புதிய பெயரை சூட்டினார். அப்போது அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா?

இந்நிலையில் தேசிய கட்சியாக மாற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் ஆணையம், பாரத் ராஷ்ட்ர சமிதியை தேசியக் கட்சியாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடைத்தேர்தலில் பங்கேற்கும்:

தேசியக் கட்சி மாற்றத்துக்கு பிறகு, நவம்பர் 4ம் தேதி அம்மாநிலத்தின் முனுகோடு சட்டப்பேரவைக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட உள்ளது.