மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் !

மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் !

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதாரப் பள்ளியை தேசத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மருத்துவத் துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் மட்டும் பாடப்பட்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பின்னர், தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியதின் பேரில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது,

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்வு தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு என்றும், இனி வரும் காலங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என இயக்குநர் உறுதி அளித்ததாகவும் கூறினார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசின் நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.