”உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது” - தமிழிசை கருத்துக்கு மாறாக அமைந்த முதலமைச்சரின் கருத்து!

”உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது” - தமிழிசை கருத்துக்கு மாறாக அமைந்த முதலமைச்சரின் கருத்து!

டெல்லி அரசு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதே வேளையில் தாங்கள் வலியுறுத்தி வந்ததை நீதிமன்றம் கூறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுத்தான் அதிகாரம் என்ற உச்சநீதிமன்ற  தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு என்றும், இத்தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது என்றும், ஆளுநர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை என்றும் கூறினார்.

இதையும் படிக்க : விஜய்காக, விஷாலை வம்பிழுத்த செல்லூர் ராஜூ...சர்ச்சையான பேச்சு!

தொடர்ந்து இத்தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்துமா என்பது தீர்ப்பை படித்துப்பார்த்தால் தான் தெரியும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்த மோதல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்த வழக்கில், டெல்லியில் ஆளுநரை விட, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.