மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், சி.பி.ஐ அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்தது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபான கொள்கை ஊழல் முறைகேடு தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது. 

இதையும் படிக்க : டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா...!

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரது ராஜினாமா கடிதத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதுடன், நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.