வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு... வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ.

வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு சோதைனை வெற்றிகரமாக நடைபெற்றது.

வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு... வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள நவீன ரக தொலைதூர வெடிகுண்டு, வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்டது.

வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் தொலைதூர வெடிகுண்டை, ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ. அமைப்பின் இமாரத் ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.

விமானப்படையின் போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட தொலைதூர வெடிகுண்டு, நிலத்தில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் செயல்பாடு பல சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.

இந்த தொலைதூர வெடிகுண்டு சோதனை வெற்றிக்காக, டி.ஆர்.டி.ஓ. மற்றும் விமானப்படை குழுவினரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.