மல்யுத்த வீராங்கனைகளை ஆதரித்து, கபில்தேவ் கிரிக்கெட் அணி சார்பில் அறிக்கை...!

மல்யுத்த வீராங்கனைகளை ஆதரித்து, கபில்தேவ்  கிரிக்கெட் அணி சார்பில்  அறிக்கை...!

' எங்கள் சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது ' என மல்யுத்த வீராங்கனைகளை ஆதரித்து, 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

Wrestlers And Police Clash As Grapplers Attempt March Towards New Parliament  Building: PICS

தங்கள் பதக்கங்களை ஹரித்துவாரின் கங்கையில் வீராங்கனைகள் தூக்கியெறியச் சென்றதும் பேசுபொருளானது. இந்நிலையில், பல ஆண்டு முயற்சி, தியாகம், மனவலிமை உள்ளிட்டவற்றின் அடையாளமான பதக்கங்கள், தேசத்திற்கே பெருமையளித்தவை என 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

Wrestlers delay plan to immerse medals into Ganga | News9live

இதையும் படிக்க      | மேகதாட்டு அணை திட்டம்: டி.கே.சிவகுமாருக்கு வைகோ கண்டனம்!

அதில், "எங்கள் சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது", எனவும்  " கங்கையில் பதக்கங்களை தூக்கியெறிவோம் என அவசர முடிவெடுக்க வேண்டாம்",  எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அதோடு, விரைவில் அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும், நாட்டில் சட்டம் மேலோங்கட்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வீரர்களின் இந்த அறிக்கையால், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதையும் படிக்க      | ”கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல, கடுந்தன்மை” கொந்தளித்த அன்புமணி !