உத்ரகாண்ட் கொலை சம்பவத்தில் மாநில அரசு ஆதாரங்களை அழிக்கிறது.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

கேரளாவில் யாத்திரையை முடித்த ராகுலகாந்தி நாளை நீலகிரியில் தொடங்குகிறார்..!

உத்ரகாண்ட் கொலை சம்பவத்தில் மாநில அரசு ஆதாரங்களை அழிக்கிறது.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

கேரள பயணம் முடிவு:

மக்களை ஒன்றிணைக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையின் 21வது நாள் பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, கேரளாவில் இன்றுடன் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். 

பாரத் ஜோடா யாத்திரை:
 
மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திடும் முயற்சியில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு வருகிறார். இதற்கென கன்னியாகுமரி  முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்திரையை ’ தொடங்கியுள்ள அவர், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

நாளை நீலகிரியில் தொடக்கம்:

அந்தவகையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருந்த ராகுல் காந்தி, இன்றுடன் அங்கு பயணத்தை நிறைவு செய்து மீண்டும் நாளை நீலகிரியின் கூடலூர் பகுதிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உற்சாக வரவேற்பு:

இதற்கென காலையிலேயே கேரளாவின் மலப்புரம் பகுதியில் இருந்து பயணத்தை தொடங்கிய ராகுல், அருகிலுள்ள மக்களையும் நடந்து சென்று சந்தித்து வருகிறார். இவருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜக மீது குற்றச்சாட்டு:

முன்னதாக நேற்றைய நடைபயணத்தின் போது பண்டிக்காடு பகுதியில் பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல், பெண்களை 2-ம் பட்ச குடிமகன்களாக பாஜக கருதுவதாக சாடினார்.  உத்தரகாண்டில் பாஜக தலைவரின் மகன் நடத்திய ரிசார்டில், வேலை பார்த்த பெண் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த மாநில அரசு ஆதாரங்களை அழித்து வருவதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.