ஸ்தம்பிக்க வைத்த எம்.பிக்கள்.... பின்வாங்கிய பாஜக... பரபரப்பான நாடாளுமன்றம்...

ஸ்தம்பிக்க வைத்த எம்.பிக்கள்.... பின்வாங்கிய பாஜக... பரபரப்பான நாடாளுமன்றம்...

நான்கு காங்கிரஸ் உறுப் பினர்களின் இடைநீக்கத்தை நீக்குவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியால் தாக்கல் செய்யபட்டது.  தீர்மானத்திற்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான்கு காங்கிரஸ் உறுப் பினர்களின் இடைநீக்கம் மக்களவையில் திரும்ப பெறபட்டது.

காங்கிரஸ் எம். பிக்கள்:

மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் மற்றும் எஸ் ஜோதிமணி ஆகிய நான்கு காங்கிரஸ் உறுப் பினர்கள் கடந்த 26ம் தேதி அவையின் எஞ்சிய செயல்பாடுகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

மழைக்கால கூட்டதொடர் தொடங்குவதற்கு முன்பு சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து தரப் பினரையும் அவைக்குள் பதாகைகள் கொண்டு வர வேண்டாம் என்று அறிவித்திருந்தார். தவறினால் விதிகளை கடுமையாக அமல்படுத்துவேன் என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

அதையும் மீறி எதிர்கட்சி எம். பிக்கள் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்ப்பு பதாகைகளை தாங்கி அவையின் செயல்பாட்டை நடத்த விடாமல் தடங்கல் ஏற்படுத்தினர்.  இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட எம். பிக்கள் நால்வரும் ஜுலை 26ம் தேதி அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து எம். பிக்கள் நால்வர் மீதான இடைநீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

பிர்லா எச்சரிக்கை :

அவைக்குள் பதாகைகள் கொண்டு வரக்கூடாது என்று அவையில் உள்ள அனைத்து தரப் பினரையும் கேட்டுக் கொள்வதாக பிர்லா கூறியுள்ளார். மீறி எம். பி.க்கள் பதாகைகளை கொண்டுவந்தால்,  அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ சொல்வதைக் கேட்கமாட்டேன் என்றும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் சபாநாயகார் தெரிவித்துள்ளார்.அவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிப்பதாகவும் எம். பிக்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டதும் பிர்லா கூறியுள்ளார்.

ஸ்தம் பிக்க வைத்த எம். பிக்கள்:

எம். பி.க்கள் இடைநீக்கம்செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபை கூடியதும் நண்பகல் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சி எம். பி.க்கள் கோஷமிட்டதால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முடங்கிய நாடாளுமன்றம்:

ஜூலை 18-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் விலைவாசி உயர்வு மற்றும் சில உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு மீதான விவாதம் போன்ற கோரிக்கைகள் காரணமாக மக்களவை நடவடிக்கைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன.