இன்று முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்படும்!

டெல்லி இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் இன்று முதல் ஸ்புட்விக் வி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்படும்!

டெல்லி இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் இன்று முதல் ஸ்புட்விக் வி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டினை போக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அவசர கால அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசிக்கான சோதனை முயற்சி கடந்த மாதம் ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு 30 லட்சம் தடுப்பூசிகளை ரஷ்யா அனுப்பியுள்ளது. அவை பல்வேறு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இந்திரபிரஸ்தா மருத்துவமனையில்  ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு டோஸ் விலை ஆயிரத்து 145 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.