சிவசேனாவை பிரித்த ஷிண்டே அணியில் பிளவா?!! கட்சியை காப்பாற்ற ஷிண்டே என்ன செய்யபோகிறார்?!!

சிவசேனாவை பிரித்த ஷிண்டே அணியில் பிளவா?!!  கட்சியை காப்பாற்ற ஷிண்டே என்ன செய்யபோகிறார்?!!

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவான ஷிண்டே அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவசேனா பிளவு:

மகாராஷ்டிராவில் மெகா விகாஸ் கூட்டணியிலான சிவசேனா ஆட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது. மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தோல்வியுற்று, முதலமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதனால் பாஜகவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

எம்எல்ஏ- அமைச்சர்:

இந்நிலையில் ஏக்நாத ஷிண்டே அணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ஷிண்டே அணியின் அமைச்சர் மீது அதே அணியின் எம்எல்ஏ ஒருவர் குற்றஞ்ச்சாடியுள்ளார்.  மகாராஷ்டிராவின் அமைச்சரான குலாப்ராவ் பாட்டீல் மீது எம்எல்ஏ சிமன்ராவ் பாட்டீல் குற்றத்தை முன்வைத்துள்ளார்.  

மேலும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மாற்றாந்தாய் போல் நடத்தப்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார் எம்எல்ஏ சிமன்ராவ் பாட்டீல். 

குற்றச்சாட்டு:

அமைச்சரான குலாப்ராவ் பாட்டீல் என்சிபி கட்சியின் எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவும் தனது தொகுதி மேம்பாட்டுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.   

பாட்டீல் vs பாட்டீல்:

உண்மையில் சிமன்ராவ் பாட்டீலுக்கும் குலாப்ராவ் பாட்டீலுக்கும் இடையிலானது பழைய பகையே. பாட்டீல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  சிவசேனாவுக்கு எதிராக ஷிண்டே பிரிவினர் கிளர்ச்சி செய்தபோது, ​​சிமன்ராவ் உத்தவ் தாக்கரே அணியுடனே இருந்தார்.

ஆனால் அவர் உத்தவ் தாக்கரேவால் புறக்கணிக்கப்படத் தொடங்கியதும் ​​ஷிண்டே அணியில் இணைந்தார்.  சிமன்ராவ் பாட்டீலும் அமைச்சராக விரும்பினார்.  ஆனால் முதலமைச்சர் ஷிண்டே அவரது விருப்பத்தை நிறைவேற்றவில்லை. 

எச்சரிக்கை விடுத்த எம்எல்ஏக்கள்:

எம்எல்ஏ பிரசன்ன காடு என்பவர் இந்த பிரச்சினையில் முதலமைச்சர் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் தலையீட்டை கோரியுள்ளார்.   இதற்கான தீர்வு காணப்படவில்லை எனில் பெரிய முடிவை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் காடு.  

கூட்டணி அரசின் உயர்மட்ட தலைவர்கள் இந்த விவகாரத்தில் தீர்வு காணாவிட்டால், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் பெரிய முடிவை எடுப்பார்கள் என்று பிரசன்ன காடு தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தலைமறைவாயிருந்த பிஎஃப்ஐ செயலாளர் கைது..!!!