மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி... பிரியங்கா அதிரடி அறிவிப்பு...

உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர்: பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி... பிரியங்கா அதிரடி அறிவிப்பு...

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரியங்கா காந்தி தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சில மாணவிகளை சந்தித்ததாகவும், அவர்கள் தங்கள் படிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் ஸ்மார்ட் போன் வழங்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்ட அவர்,12 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஸ்மார்ட் போன் மற்றும் அனைத்து பட்டதாரிப் பெண்களுக்கும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஸ்கூட்டி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்த பிரியங்கா காந்தி தற்போது மாணவிகளை குறி வைத்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.