பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நாளை பதவியேற்கிறார் சித்து...

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நாளை பதவியேற்க உள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நாளை பதவியேற்கிறார் சித்து...
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர் சிங்கை சித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
 
இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவிக்கு போட்டியிடவே சிந்து இவ்வாறு நடந்துக் கொள்வதாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் தலையிட்டது. நவ்ஜோத் சிங் சித்து-வை சமாதானப்படுத்த அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் சித்து-வுக்கு அமரீந்தர் சிங் இடையேயான மோதல் தீர்ந்தபாடில்லை.
 
சித்து மன்னிப்பு கேட்கும் வரை அவரை சந்திக்க போவதில்லை என அமரீந்தர் சிங் பிடிவாதமாக இருக்கிறார். இந்த நிலையில்  பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நாளை பதவியேற்க உள்ளார்.