சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் - லாரன்ஸ் பிஷ்னோய் நீதிமன்றத்தில் ஆஜர்!

சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் கைதாகியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் - லாரன்ஸ் பிஷ்னோய் நீதிமன்றத்தில் ஆஜர்!

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, கடந்த 29- ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் ரௌடி கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் சதி திட்டம் தீட்டி சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான கோல்டி பிரார் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் இன்று அமிர்தசரஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனால் நீதிமன்றத்தை சுற்றி 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.