நாட்டிற்கு எதிராக செயல்பட்டால் சுட்டுக்கொலை - உ.பி அமைச்சர்

இந்தியாவிற்கு எதிராக செயல்படுவோர் கொலை செய்யப்படுவர் என உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிற்கு எதிராக செயல்பட்டால் சுட்டுக்கொலை - உ.பி அமைச்சர்

இந்தியாவிற்கு எதிராக செயல்படுவோர் கொலை செய்யப்படுவர் என உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தான் வேறு இடத்திற்கு புலம்பெயர வேண்டும் என பழம்பெரும் கவிஞர் முனவ்வார் ராணா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். 

இதனை கடுமையாக விமர்சித்திருந்த அகில பாரதிய அஹரா பரிஷத், ராணா உத்தரபிரதேசத்தை விட்டு வெளியேற தயாராகும்படி தெரிவித்திருந்தது. இந்தநிலையில் ராணாவை தாக்கும் விதமாக , கருத்துக்கூறியுள்ள நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, இந்தியாவிற்கு எதிராக செயல்படுவோர் சுட்டுக்கொல்லப்படுவர் என கூறி, தற்போது  சர்ச்சையில் சிக்கியுள்ளார்.