சரத் பவார் மீதும் பாய்கிறதா ஊழல் குற்றச்சாட்டு?!!!

சரத் பவார் மீதும் பாய்கிறதா ஊழல் குற்றச்சாட்டு?!!!

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் சிறைக்கு சென்ற அதே வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தொடர்பையும் விசாரிக்க வேண்டும் என்று மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பாஜக எம்எல்ஏ அதுல் பட்கல்கர் கடிதம் எழுதியுள்ளார். 

பட்கல்கர் கடிதம்:

சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை சுட்டிக்காட்டிய பட்கல்கர், இந்த வழக்கில் சரத் பவாரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

பத்ரா சால் ஊழல்:

பத்ரா சால் ஊழலில் சரத் பவாரும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

பட்கல்கரின் கடிதத்திற்குப் பிறகு பவார் விசாரிக்கப்படுவாரா?:

இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்ட நிலையில், இன்று பவார் மட்டுமே பாஜகவின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். ”என் மீது குற்றம் சுமத்தியுள்ளீர்கள், உடனடியாக விசாரணை நடத்துங்கள். அடுத்த 8 நாட்களில் விசாரணை நடத்துங்கள்.  ஆனால் அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றால் முதலில் குற்றம் சாட்டியவர்கள் தொடர்பாக மாநில அரசின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்” என சரத் பவார் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார். 

செய்தியாளர் சந்திப்பு:

அதன் பிறகு இன்று என்சிபி தலைவர் சரத் பவார் மும்பை ஒய்பி சவான் சென்டரில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.  அப்போது பவாருடன் என்சிபி தலைவர் ஜிதேந்திரா அவாத்தும் உடனிருந்தார். அவர் தனது தனித்துவமான பாணியில் குற்றச்சாட்டுகளை மறுத்து, பாஜகவுக்கு வலுவான பதிலடியும் கொடுத்துள்ளார்.

சரத் பவார் விமர்சனம்:

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வது மத்திய அரசின் முக்கியத் திட்டமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், ”இன்றைய நாளிதழைப் பார்த்தால், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன என்ற முழு விவரம் அதில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதுதான் மத்திய அரசின் தலையாய திட்டமாகத் தெரிகிறது” என்றும் கூறியுள்ளார்.

அரசியல் பதிலடி:

அதனைத் தொடர்ந்து, “தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய அரசிற்கு சந்தேகம் எழும் போதெல்லாம், இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியமான செயலாக எடுக்கப்படும்” என்று பவார் கூறியுள்ளார். சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுகின்றன எனவும் அதற்கு அரசியல் ரீதியாக பதில் அளிப்போம் " என்று என்சிபி தலைவர் கூறியுள்ளார்.

பத்ரா சால் ஊழல்:

பத்ரா சால் ஊழலில் சரத் பவாரும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதையும் படிக்க: குடிப்பழக்கத்திற்கு அடிமையானவரா ஜின்னா!!!