நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு அவரச கால அனுமதி... சீரம் நிறுவனம் விண்ணப்பம்...

நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவரச கால பயன்பாட்டுக்கான அனுமதியை கோரி மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு அவரச கால அனுமதி... சீரம் நிறுவனம் விண்ணப்பம்...

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மிகவும் பிரதானமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர மாடர்னா தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி சீரம் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வரும் நிலையில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 
நோவோவேக்ஸ் தடுப்பூசி 90. 4 சதவிகிதம் அளவுக்கு கொரோனாவுக்கு எதிராக பலனளிக்கும் என்று சோதனையின்போது தெரியவந்தது. இதன் செயல் திறன் நன்றாக இருப்பதாக மத்திய அரசும் பாராட்டியுள்ளது குறிப்பிடதக்கது.