பள்ளிகளை திறக்க மாட்டோம்... ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு...

ராஜஸ்தானில் முன்பு அறிவித்தபடி ஆகஸ்ட் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என முதல்வர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார்.

பள்ளிகளை திறக்க மாட்டோம்... ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு...
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி  முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவு தற்போது மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.முன்பு அறிவித்த படி ஆகஸ்ட் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார்.  
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் இதற்காக மாநிலத்தின் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இக்குழுவில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், வேளாண் அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இக்குழு முடிவெடுக்கும் எனவும் கூறினார்.