கேரளா: ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்.. விபத்தில் சிக்கிய பேருந்து.. 9 மாணவர்கள் பரிதாப பலி..!

நள்ளிரவில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்த 41 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

கேரளா: ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்.. விபத்தில் சிக்கிய பேருந்து.. 9 மாணவர்கள் பரிதாப பலி..!

சுற்றுலாவுக்கு சென்ற மாணவர்கள்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 43 பேர் உட்பட 51 பேர் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக தனியார் பேருந்தில் சென்றனர்.

9 மாணவ, மாணவிகள் பலி:

பாலக்காடு வடக்காஞ்சேரி அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மீது தனியார் பேருந்து வேகமாக மோதியது. தொடர்ந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த வேகத்தில், சம்பவ இடத்திலேயே 9 மாணவ, மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

10 பேரில் நிலை கவலைக்கிடம்:

அக்கம் பக்கத்தினர் மீட்டு மற்ற அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்ததில், 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படுகாயமடைந்த 41 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.