சொந்த மாநிலத்திலேயே ஆதரவு கிடைக்காமல் அல்லாடும் சசி தரூர்.. காங். தலைவராக யார் தான் வருவார்?

அடுத்த மாதம் 17-ம் தேதி காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது..!

சொந்த மாநிலத்திலேயே ஆதரவு கிடைக்காமல் அல்லாடும் சசி தரூர்.. காங். தலைவராக யார் தான் வருவார்?

தற்காலிக தலைவர்:

காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல்காந்தி, கடந்த பிரதமர் தேர்தலில் தோல்வியை தழுவியதால், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சோனியா காந்தியே காங்கிரஸின் தற்காலிக தலைவராக இருந்து வருகிறார். 

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் இருந்தால் தான் அடுத்தடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள முடியும் என்ற சூழல் நிலவுகிறது. சரியான தலைமை இல்லாததால், பல மூத்த தலைவர்களே கட்சியிலிருந்து விலகி வருவது கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. ஆகையால் காங்கிரஸ் கட்சி தலைவர் வேண்டும் என்பதால் அதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 

சசிதரூர், அசோக் கெலாட் போட்டி:

அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்தலில் அசோக் கெலாட், சசி தரூர் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் களமிறங்க வேண்டும் என பலரும் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். 

சசிதரூருக்கு வலுக்கும் எதிர்ப்பு:

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட எம்.பி சசிதரூர் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவருக்கு சொந்த மாநில உறுப்பினர்களே ஆதரவு தர மறுத்துள்ளனர். குறிப்பாக மக்களவை எம்.பி. கே.சுரேஷ், பென்னி பெகனன் ஆகியோர், சசிதரூர் இத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும், அவர் கட்சி தலைமை முடிவுக்கு கட்டுப்படுவார் எனவும் கூறியுள்ளனர். மேலும் ராகுல் காந்தியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும், கேரள காங்கிசார் கூறியுள்ளனர்.