தொடர்ந்து அடிவாங்கும் மருத்துவர்கள்...! பாதுகாப்பு கொடுப்பிங்களா..இல்லையா? மருத்துவர்கள் ஆவேசம்!!

மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா முழுவதும் மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தினர், கொரொனா காலகட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய என் உயிரையும் துச்சமென மதித்து செயல்பட்டதாக குறிப்பிட்டவர், 

ஆனால் அந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என கூறினர். அசாம், கர்நாடக, ஆந்திர போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர்கள், மத்திய அரசு உடனடியாக மருத்துவர்களை பாதுகாக்க மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.