ரத்த தானம் செய்த கிரிக்கெட் கடவுள்!

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார்.

ரத்த தானம் செய்த கிரிக்கெட் கடவுள்!

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார்.

உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த நிலையில், இரத்ததான தினத்தை அடுத்து இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  ரத்த தான தினத்தையொட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார். ரத்ததானம் செய்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=lmz0qMJC4yw