எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது

கர்நாடகத்தில் 8 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது

கர்நாடகத்தில் 8 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது.

கொரோனா பரவல் காலத்திலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடவெளியை கடைபிடித்து தேர்வு எழுதி வருகின்றனர். இன்றும் மற்றும் வரும் 22-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வும், வரும் 22-ம் தேதி மொழி தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், தேர்வு எழுத மாணவர்களுக்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.