பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை தொடர்பான மனு ... உச்சநீதிமன்றம் உத்தரவு

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை தொடர்பான ஒடிசா அரசின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வீட்டிலிருந்தே வழிபடும்படி அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அங்குள்ள பூரி ஜெனகாநதர் கோயிலில் மட்டும் பக்தர்களின்றி ரத யாத்திரையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, தானும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெகநாதர் கோயிலுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

கடவுள் அனுமதித்தால் அடுத்தாண்டு வழிபாடுகளை  நேரில் காணலாம் என்று கூறிய அவர், கொரோனா காரணமாக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும்,  அதுவரை வீட்டிலிருந்தே தொலைக்காட்சி வாயிலாக கோயில் நிகழ்வுகளை காணும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.