மேற்கு வங்க இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்தார் மம்தா பானர்ஜி...!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்தார் மம்தா பானர்ஜி...!

மேற்கு வங்கம் சாகர்திகி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.


மேற்கு வங்கம் சாகர்திகி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், எதிர்கட்சியான பாஜக, காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி ஆகியோர் களமிறங்கினர்.

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு...? 3 ஆம் சுற்றின் நிலவரம்...

அதன்படி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தேபாஷிஷ் பானர்ஜியும், பாஜக வேட்பாளராக திலீப் சாஹாவும், இடதுசாரி-காங்கிரஸ் வேட்பாளராக பேரோன் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளராக போட்டியிட்டனர். 

இந்நிலையில் மேற்கு வங்கம் சாகர்திகி சட்டமன்ற தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தேபாஷிஷ் பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். இதன்முலம் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.