6 ஆண்டுகளில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு: பிரபல நிறுவனத்தின் மோசடி அம்பலம்  

மத்திய பிரதேச மாநிலம் போபாலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைனிக் பாஸ்கர் குழுமம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகம், ஜவுளி, மின்சாரம், நிலங்கள் விற்பனை உள்பட பல்வேறு வர்த்தகத் துறைகளில் ஈடுபட்டு வரும் தைனிக் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களிலும் தைனிக் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பெயரில் புதிய நிறுவனங்களை தைனிக் குழுமம் தொடங்கியுள்ளதாகவும், அவர்களின் பெயர்களில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.