குன்றில் ஏற்பட்ட மண்சரிவால் உருண்ட பாறைகள்: 9 பேர் பலி!?  

இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னோர் மாவட்டத்தில் குன்று ஒன்றிலிருந்து, பாறைகள் உருண்டு விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கின்னோர் மாவட்டத்தில் உள்ள பட்சேரி கிராமத்தில் குன்று ஒன்றில் திடீரென மண்சரிவு ஏற்பட்ட நிலையில், உச்சியிலிருந்த பாறைகள் உருண்டு கீழே விழுந்தன. பல மீட்டர் உயரத்திலிருந்து உருண்ட பாறைகள், வழியில் இருந்த பாறைகளில் மோதி பல மீட்டர் தூரம் அந்தரத்தில் பறந்தன. இந்தப் பாறைகள், அடிவாரத்தில் இருந்த வீடுகள் மற்றும் இரும்பு பாலத்தில் மோதியதில் இரும்பு பாலம் அப்படியே விழுந்து நொறுங்கியது.

மேலும் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்ததில் காரில் இருந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்