ஜிஎஸ்டி வரியால் விலை உயரும் அபாயம்? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்

5 சதவீத ஜிஎஸ்டி வரிவிகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலனை செய்து வருவதால், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியால் விலை உயரும் அபாயம்? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்

மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், 3, 5, 7, 8 உள்ளிட்ட வரி விகிதங்கள் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிகள் வசூலிக்கப்படுகின்றன.

இந்தநிலையில் 5 சதவீத வரிவிகிதத்தின் கீழ் வரும் பொருட்களை பிற வரி விகிதங்களுக்கு மாற்ற ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்து வருகிறது. இதன் மூலம் ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

குறிப்பாக 5 சதவீத வரிவிகிதங்களில் உள்ள பொருட்களை 3, 7 அல்லது 8 சதவீத வரிவிகிதங்கள் பட்டியலில் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

மேலும் 5 சதவீத வரிவிகிதத்தில் உள்ள பொருட்களுக்கு கூடுதலாக ஒரு சதவீக வரி உயர்வு அறிவித்தாலும், ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் 5 சதவீத வரிவிகிதத்தில் பெரும்பாலும் உணவு பொருட்களே வருவதால் அவற்றை எந்த வரிவிகிதத்தில் சேர்ப்பது என்பது குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

மேலும் வரி விகிதத்தில் அடங்காத, பொட்டலமிடப்படாத உணவு பொருட்களை 3 சதவீதம் வரிப்பட்டியலில் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் மத்திய, மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களுடனான கலந்துரையாடலுக்கு பிறகே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.