
ராமர் பிறந்த தினத்தை ஒட்டி, மத்தியப்பிரதேசத்தின் தலாப் சவுக் பகுதியில், நேற்று இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அவர்கள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஒலிப்பெருக்கியில் பாடல்களை ஒலித்தபடி சென்றதால், அப்பகுதியினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கண்ணீர் புகை குண்டு வீசிய நிலையில், போராட்டம் வெடித்ததால், ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள வீடுகள் சிலவற்றுக்கும் தீவைக்கப்பட்டு, கோயில் ஒன்றும் சூறையாடப்பட்டது. இந்தநிலையில் பதற்றத்தை தணிக்க 3 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதிகளவில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.