"அக்னிபத்"-ஐ திரும்பப்பெற ராஜஸ்தான் அமைச்சரவையில் தீர்மானம்..!

இந்திய ராணுவத்தின் நலனை கருத்தில்கொண்டு அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென ராஜஸ்தான் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"அக்னிபத்"-ஐ திரும்பப்பெற ராஜஸ்தான் அமைச்சரவையில் தீர்மானம்..!

ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த முறையில் இளைஞர்கள் பணிபுரியும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும்  எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்நிலையில், உலகிலேயே துணிச்சலான இந்திய ராணுவத்தை வலுப்படுத்த நிரந்தர வீரர்கள் இருப்பதே சரியாக இருக்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற ராஜஸ்தான் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசத்திருக்க வேண்டும் எனவும் ராணுவ வீரர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் இத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.