நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் அவசியம் - மன்சுக் மாண்டாவியா!

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் அவசியம் -  மன்சுக் மாண்டாவியா!

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், 1.30 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனாவிற்கு மருந்து தயாரிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் கடுமையான முயற்சியால் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியா மட்டுமன்றி மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, நாட்டின் வளர்ச்சிக்கு அறிவு மற்றும் ஆராய்ச்சி  கட்டாயம் தேவை எனக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.