2 வருடங்களாக தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்..! நாய்களை போல செயல்படுவதால் அதிர்ச்சி!!

2 வருடங்களாக தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்..!  நாய்களை போல செயல்படுவதால் அதிர்ச்சி!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள குடியிருப்பில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுவன் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தொண்டு நிறுவனத்தினர், நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுவனை மீட்டனர்.

அப்போது அங்கு 4 நாய்கள் இறந்த நிலையில் இருந்ததாகவும், குடியிருப்பில் விலங்குகளின் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 2 ஆண்டுகள் நாய்களுடன் சிறுவனை அடைத்து வைத்து இருந்ததால், அவன் நாய்களை போன்று செயல்பட தொடங்கியுள்ளான்.

இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும், சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.