தெலுங்கானா ஆளுநர் மாளிகையில்...மூவர்ணக் கொடியை ஏற்றிய ஆளுநர் தமிழிசை...!

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில்...மூவர்ணக் கொடியை ஏற்றிய ஆளுநர் தமிழிசை...!

74-வது குடியரசுத் தினத்தை ஒட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தெலுங்கானாவில் கொடியேற்றிய ஆளுநர் தமிழிசை :

நாட்டின் 47 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை, தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார்.

இதையும் படிக்க : 74வது குடியரசு தின விழா: மூவர்ண கொடியேற்றிய தமிழ்நாடு ஆளுநர்...!

முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள வீருள சைனிக் ஸ்மாரக் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து போர் வீரர்களுக்கு ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, ஆளுநர் பங்கேற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்காமல் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.