பிளாஸ்டிக் தடை குறித்து வரைவு அறிக்கை வெளியீடு... உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தகவல்...

பிளாஸ்டிக் தடை குறித்து வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தடை குறித்து வரைவு அறிக்கை வெளியீடு... உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தகவல்...

தேர்தலின்போது பிளாஸ்டிக் விளம்பர பலகைகள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேலும் சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், தேர்தல் ஆணையமும் நடத்தை விதிகளில் இணைத்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்து சென்னையைச் சேர்ந்த எட்வின் வில்சன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ். அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜரானார். அப்போது அவர், 100 மைக்ரான் அளவுக்கும், குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து கருத்துகளை அறியும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டபிறகு, இறுதி முடிவு எடுத்து உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.