5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

தென் மாநிலங்களில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது வட மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவின் புனே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதேபோல் மும்பை மற்றும் தானேவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் முறையே 135 புள்ளி 5 மில்லிமீட்டர் மற்றும் 137 புள்ளி 7 மில்லிமீட்டர் வரை மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.