வங்கி பணியாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் ஹாப்பி அனோன்ஸ்மெண்ட்

வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

வங்கி பணியாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் ஹாப்பி அனோன்ஸ்மெண்ட்
வங்கிகளுக்கு ஜீலை மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை தினமாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் ஜூலை 21ம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்கள் என மொத்தம் 6 நாட்கள் மட்டுமே நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மீதமுள்ள 9 விடுமுறை தினங்கள் பல்வேறு மாநிலங்களின் உள்ளூர் பண்டிகைகளுக்கான விடுமுறை தினங்கள் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த தினங்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை விடப்படும் என்றும் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.