ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க கம்போடியா செல்கிறார் ராஜ்நாத் சிங்!!!

ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க கம்போடியா செல்கிறார் ராஜ்நாத் சிங்!!!

கம்போடியாவில் நடைபெறும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் கம்போடியாவில் நடைபெறும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.  இந்த கூட்டத்திற்கு அவரும் தலைமை தாங்கவுள்ளார்.  இந்தியா-ஆசியான் உறவின்  30 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி கம்போடியாவால் நடத்தப்படுகிறது.  

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அழைக்கப்பட்ட ஆசியான் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து ஆலோசித்து, இந்தியா-ஆசியான் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1992 ஆம் ஆண்டு முதல்: 

இந்தியா 1992 ஆம் ஆண்டு முதல் ஆசியான் அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. முதல் ஆசியான் மாநாடு வியட்நாமின் ஹனோயில் அக்டோபர் 12, 2010 அன்று நடைபெற்றது. 2017 முதல், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி, ஆசியான் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்து வருகின்றனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் த்ரௌபதி முர்மு!!!