பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வு

பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஷ்ரப்  தேர்வு

பாகிஸ்தான் பிரதமராக செயல்பட்டு வந்த இம்ரான்கான் மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.    இதற்கிடையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக செயல்பட்டு வரும் குவாசிம் கான் சுரி, இம்ரான்கானின் ஆதரவாளர் என  தகவல் வெளியானது.

தற்போது புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் குவாசிம் மீது இன்று ஆளும்கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சுரி ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமாவை நாடாளுமன்ற செயலாளர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பாகிஸ்தான் நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக பணியாற்றியவர் ஆவார்.