பொய்யான குற்றசாட்டால் ராகுல் அலுவலக ஊழியர்கள் கைது....!!!!!

பொய்யான குற்றசாட்டால் ராகுல் அலுவலக ஊழியர்கள் கைது....!!!!!
Published on
Updated on
1 min read

கேரளாவில் வயநாடு தொகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸ் தொண்டர்கள் மகாத்மா காந்தியின் உருவ படத்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வயநாடு எம்.பி அலுவலகத்தில் ஜுன் 24 அன்று தாக்குதல் நடத்திய சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ)உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக கட்சி தொண்டர்கள் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாக கேரளாவின் காங்கிரஸ் மாநில தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ராகுல் காந்தியின் தனி உதவியாளர் ரதீஷ் குமார், அலுவலக ஊழியர் ராகுல் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள் நௌஷாத் மற்றும் முஜீப் ஆகியோர் அடங்குவர்.  இந்தத் தாக்குதல் தொடர்பாக இதற்கு முன்னர் எஸ்எஃப்ஐ தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ராகுல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால் அவருடைய அலுவலகத்தில் எஸ்எஃப்ஐ உறுப்பினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு சிபிஎம் கட்சி பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com